Skip to main content

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்


ஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.

               இது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை


ரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங்கினேன். சுவை நம் நாட்டு சிக்கன் ரைஸ் போல அல்ல. கொஞ்சம் கவிச்சி வாடை வீசியது. பசிக்கும் கவிச்சிக்கும் சம்பந்தம் உண்டா தோழர்களே?

பியரின் விலை மிக மலிவு. இங்கே அரை லிட்டர் டின் ஆறு ரிங்கிட். அங்கே மூன்றரை ரிங்கிட்தான். வெயிலுக்கு இதமாக இருந்தது.

"வாங்க உங்களை முக்கியமான இடதுக்கு கொண்டு காட்டுகிறேன்," என்றார்.
காரை வேறெங்கும் நிறுத்தமுடியாது. அங்கே இருப்பதே பாதுகாப்பு. எனவே நாங்கள் நடந்தே சென்றோம். ரொம்ப தூரமில்லை. அதுவும் ஒரு தினசரி சந்தைதான். அவர் கொண்டு சென்று காட்டிய இடம் பலான பலான உபயோகத்துக்குப் பாவிக்கும் பொருட்கள். செயற்கை ஆண் குறி, செயற்கை பெண் குறி. வீர்ய மருந்து வகைகள். போலி வயாக்ரா, நீல பட கேசட்டுகள் இன்னும் என்னென்ன எளவெல்லாம் விற்கிறார்கள்.  ஆண்களதான் நம்மை கூப்பிட்டு விளக்கி வனிகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் பெண்களும் ஈடான எண்ணிக்கையில் கூச்சமே இல்லாமல் பலான பலான பொருட்களை விற்கிறார்கள். அந்த இடம் முழுதுமே அதற்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். பார்த்ததோடு சரி. அது பெரிய ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் பெண்களும் அவ்வியாபாரத்தில் ஈடுபடுவது அந்நாட்டின் ஏழ்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. வயிறு எல்லாருக்கும் உண்டுதான். ஆனால் பசிக்கும் மனிதர்கள் வயிறுக:ளுக்காகத்தான் இந்த கீழ்மை வேலையெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. இருந்தும குடிமக்களின் ஏழ்மையைப் போக்க வரி வசூலிக்கிறோம் என்று ஜி எஸ் டி யோ, சாலை டோல் கட்டணமோ பிடுங்குவதில்லை.



அங்கிருந்து மீண்டும் சொங்க்லாக் பயணம்.மாலையாகிவிட்டால்  ரூம் புக்கிங் கேன்சலாக வாய்ப்புண்டு. பெருநாள் சமயம் என்றார். எனவே சுணங்காமல் புறப்பட்டோம். வெயில் கொலுத்திகொண்டிருந்தது.

நெடுக்க கடல் போல விரிந்தி நிறைந்திருந்தது ஏரிகள்.  இது கடலா ஏரியா என்ற சந்தேகத்தில் கேட்டேன். ஏரி என்றார். அது மேடான் ஏரியைவிடப் பெரியது.சுவிட்சர்லாந்தில் பார்த்த ஏரிகள் நினைவுக்கு வந்ததன. ஆனால் சிவிட்சர் லாந்தின் ஏரிகளின் கரை யோரங்களில் உல்லாசம் கொப்பளித்துக் கொண்டிருந்தன.    ஆறுகளையும் ஏரிகளையும்   அற்புதங்களாக, சுவர்க்க பூமியாக மாற்று வித்தை தெரிந்தவர்கள். இங்கே அப்படியில்லை. அவற்றை  இன்னும் பெரிய சுற்றுலாத்தளமாக ஆக்க முடியும். பெரும்பாலும் மீன்பிடி கிராமங்களே உருவாகி வந்திருக்கின்றன.




.

அரை மணி நேரப் பயணம்தான். நெடுக்க சுற்றுலா தளங்கள் இருந்தன. அவற்றில் மிதக்கும் சந்தையைப் பார்க்க ஆவல் தூண்டியது. மெக்கோங்க் நதிக் கரைகளில் இந்த மிதக்கும் சந்தை பெரும் கவர்ச்சியான சுற்றுலாத் தளம். படகுகளில் இருந்தபடியே விதம் விதமான வணிகம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சொங்லாவிலும் அதனைப் பார்க்கமுடியும் என்றால் மகிழ்ச்சிதான். சரி வரும்போது பார்த்துக்கொள்ளாலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. 
அசல் கடல்பெண் சிலை

அவர் ஏற்பாடு செய்த விடுதி 4 நட்சத்திர விடுதி. விருந்தினர் அறை கப்பல் போல விசாலமாக இருந்தது. திரும்பும் இடமெல்லாம் கடல் பரந்து கிடந்தது. மெர்மேய்ட் என்று சொல்லக் கூடிய கடல்கன்னி சிலை விருந்தினர் அறையிலிருந்து பார்க்கலாம். கடல்பெண் அங்கே கறைக்கு  வந்தாள் என்ற தொன்மக் கதையொன்று உண்டு. இப்போதும் கடல்பெண்கள் கடற்கறைக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- கிராபிக்கில். ஹாட்யாய் சொங்க்லாக் முழுவதும் கடல்கன்னி பொம்மைகள் விதம் விதமாக விற்பனைக்குக் கிடந்தன்.

விடுதி அறையை மூன்று இரவுகளுக்கு புக் செய்து வைத்திருந்தார். அவருக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஊர் சுற்றுவது மிகப் பிடித்தமான விஷயம்.  தனி ஆள். ஆளற்ற வீடு. சூன்ய உலகம் அவருடையது. மூன்று நாளைக்கு

முன்பணம் கட்டுங்கள் என்று அடம்பிடித்தாள். நான் இருண்டு நாளைக்குப் போதும் என்றே  ஒற்றைக் காலில் நின்றேன். இரண்டு நாளைக்கு நீங்கள் தங்களாம். ஆனால் மூன்று நாளைக்குப் பணம் கட்டவேண்டும் என்றாள் பணிப்பெண். வேறு விடுதிக்குப் போக முடியாது. எல்லாம் நிறைந்திருக்கும் என்ற பயம் வேறு. நான் கேட்டேன் எந்த விடுதியில் இப்படியான சட்டம் அமலில் உண்டு என்று. நான் இரண்டு நாட்களுக்குத் தான் தங்குவேன் என்றேன். பின்னர் சற்று இறங்கிவந்து நான் மேலிடத்தில் பேசுகிறேன் என்று பேசி இரண்டு நாடக்ளுக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டாள்.

விடுதி விருந்தினர் அறையில் ஆள் நடமாட்டமே குறைந்து இருந்தது. சொங்லாக் விடுதிகள் எப்போதுமே நிறைந்திருக்கும். பெருநாள் காலங்களில் இன்னும் மோசமாக இருக்கும். ஆனால் அன்று அப்படியில்லை. வெளியே கார்களும் அதிகம் இல்லை. நம்மிடம் பணம் பிடுங்கத்தான் அவள் நாடகமாடியிருக்கிறாள். கொஞ்சம் மிரட்டவே சமரசத்துக்கு வந்திருக்கிறாள்.
மற்ற விடுதிகளும் சுற்றுப் பயணிகள் குறைவாக இருப்பதான அடையாளமே தென்பட்டது. வெறிச்சோடிக் கிடந்தது விடுதி வளாகம். கடலின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏன் இந்த அமைதி? என்ன காரணம்?

முதல் முக்கியக் காரணம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சொங்லாக் ஹட்யாய் நகரங்கள் பாதித்திருப்பதே . ஹட்யாயில்  குண்டு வெடிப்புக்கு சில வருடங்களுக்கு முன்னர் பாதிக்ககப்பட்ட  ஒரு விடுதியைப் பார்த்தோம். சுஙகச் சாவடியில் லஞ்சம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால் தீரவாதிகளின் நுழைவை எப்படித் தடுப்பது?

தொடரும்.....


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின