Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம்.

தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம்.

சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.



கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆறாயிரம் ஊசிகள் கொண்டு செருகவதாக இருந்தது.10,000 அடி உயரத்தை அடையும்போது 10000 ஊசிகொண்டு தாக்குவதாக இருக்கும்.அல்லது அதற்கும் மேலும். சைபர் டிகிரி செல்செயஸ் என்பதே கடுங்குளிர்தான். நான் சீனாவில்  மைனஸ் 5 வரை குளிர் அனுபவித்தேன். அப்போது அங்கே குளிர்காலம். அதற்கும் கீழே போகும் போது பனி உறையத் தொடங்கும். சாலைகளைப் பனிமூடிவிடும். வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகளில் காபில் காரில் ஏறி இறங்க உதவ ஒரு பணிப்பெண்ணை சந்தித்துப்பேசினேன். அங்கே அவள்  கோடைகால விடுமுறையில் வேலை செய்ய ஜெர்மனியிலிருந்து வந்தவள். ஜெர்மனியில் அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் ஒருநாள் வருமானம் 300 மலேசிய ரிங்கிட்.  தனுடைய ஒராண்டுக்கான கல்விச்செலவை ஒரு கோடை விடுமுறையில் சம்பாதித்து விடுவாளாம்.

கேபில் காரின் உள்ளே பணிப்பெண்
கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தது கேபில் கார்.
இறங்கிய உடனே பனிமலைக்குப் போனோம். பனி பூப்போல கொட்டிக்கொண்டு இருந்தது. போகும் பாதையில்தான் சாருக்கானையும் கஜோலையும் பார்த்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அட சாருக் கான். நாங்கள் அவரிடம் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இருவருமே போஸ் கொடுப்பதில் ரொம்ப பிசியாக இருந்தார்கள். போவோர் வருவோர் எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தால் பிசி என்றுதானேஅர்த்தம். யாரோடும் அவர் பேசாததற்குக் காரணம் அவரும் காஜோலும் கட்டவுட்டாக வைக்கப்பட்டிருந்ததே காரணம்!!

ஹி ஹி ஏமாந்துட்டீங்களா?

மலை முழுக்க வெண்பனி மூடிக்கிடக்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் பனிப்பூவை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிகிறார்கள். சருக்கி விளையாடுகிறார்கள்.
அநத தளத்திலேயே ஐஸ்கட்டியின் மேல் நடக்கும் இடத்தையும், ஒரு குகையினுள் 50 மீட்டருக்கு  நடந்து செல்லும் வசதியையும் செய்து கொடுத்த்ருக்கிறார்கள். பயங்கரமாக வழுக்குகிறது. போகப் போக குளிர் சரம்மாறியாகாக் குத்துகிறது. ஒரு கட்டத்தில் திரும்பிவிடலாமே என்று நினைத்தேன்.  அது ஒரு வட்டம் தொடங்கிய இடத்தின் வேறு வாசலுக்கு வந்துவிடுகிறோம்.
குகையினுள் எல்லாபுறத்திலும்  ஐஸ்  கூடிக்கிடக்கிறது. நானும் என் மனைவியும்.
ஐஸ் குகைக்குப் போகுமுன்






















லுசேனோ நகர் வீதி

லுசேனோ ஏரிக்கறை



Add caption












வெளியே வருவதற்குமுன் குளிருலிருந்து தப்பித்தால்போதும் என்றாகி விடுகிறது.

மீண்டும் கீழே இறங்கி  30 நிமிட தூரத்திலுள்ள ரிஹியான போல்ஸ் (நீர்வீழ்ச்சிக்குக்) கிளம்பினோம்.

தொடரும்....

Comments

Anonymous said…
very nice artical
வணக்கம்
ஐயா.

அழகிய படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின