Skip to main content

முத்தங்கள் நிறைந்த தேசம்- முத்தம் 21.

 திகட்டத் திகட்ட சுட்ட பன்றி இறைச்சி- முத்தம் 21

லுசேனிலிருந்து கிளம்பியபோது இரவு மணி எட்டு இருக்கும். ஆனால் வெளிச்சமாகத்தான் இருந்தது. இரவு 9 மணிக்குத்தான் இருள் மெல்லப் பரவத் தொடங்கும்.







மழை மெல்லிய  இசைபோல இதமாகப் பெய்யெத் தொடங்கியது. சாலை இன்னும் கருமையாகி  மின்னியது. மழையின் நனைவில் ஈரப்பசை கூடியிருந்தது. கார் ஈரப்பசையில் நகரும்போது வழுக்கிவிடுமோ என்ற அச்சம் ஊடுருவிச்சென்றது. இருள் சூழச் சூழ நிலத்தின்  அழகு மங்கி மறைந்துகொண்டிருந்தது.



வெளிநாட்டுக் கார்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ் வழிகாட்டி கருவியிருக்கும். நம் இலக்கு எது என்று அதனுள் பதிவு செய்துவிட்டால் நேர்த்தியாகவே நம்மை இலக்கி நோக்கி அழைத்துச் சென்று சேர்த்துவிடும். முதல் நாள் நாங்கள் பயணம் செய்யும் போது அது உதவியாகத்தான் இருந்தது என்றாலும். நம் பண்பாட்டிலேயே நாம் ஊறியவர் என்பதால் அதன் மனநிலையிலேயே இருந்தே வெளியூர்களை அவதானிக்கிறோம். எத்தனை மணியானால்  என்ன கடைகள் விடுதிகள் கதவு திறந்தே இருக்கும் என்ற எண்ணம் அயலகத்தில் செல்லாது. முதல் நாள் இரவு ஜி.பி.எஸ்ஸை பயன்படுத்தி இரவு பதினொன்று வரை விடுதியைத் தேடித் தேடிக் களைத்துவிட்டோம். ஜி.பி.எஸ் நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்று சொல்கிறது. ஆனால் அடைந்த இடத்தில் ஒரு சலனமோ மனித நடமாட்டமோ இல்லை. இங்கே யாரையும் காணோமே என்று திரும்பிவிட்டோம், நான்கைந்து முறை. ஆறாவது முறை அங்கேயேதான் கூட்டிச் சென்று விட்டது. எதற்கும் மூடிய கதவைத் தட்டிப் பார்த்துவிடுவோம் என்று இறங்கி தட்டும்போதே கதவு திறந்துகொண்டது. உள்ளே ஒரே கொண்டாட்டம். ஒளி வெள்ளத்தில் விடுதி கலைகட்டி இருந்தது. மது அருந்திக்கொண்டு உல்லாசமாக இருந்தார்கள் வெள்ளையர்கள். விசாரித்தால் அதே விடுதிதான். இறங்கிப் பார்க்காததால் இந்த இன்னல்கள்.
பசி வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது . வரவேற்பாளாரிடம் உணவு கிடைக்குமா என்று கேட்டோம்.

"ஓ மன்னிக்கவும் கிச்சனை அடைத்துவிட்டோம் "என்று கூறினாள்.இந்த நேரத்தில் எங்கே போய் உணவு தேடுவது?
 அவள் சற்றே பொறுங்கள் என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போய்வந்தாள். உங்களுக்காக மீண்டும் திறக்கச் சொல்லியாயிற்று போய் உட்காருங்கள் என்றாள். அவளிடம் அத்தனை பணிவு, கூச்சம். வெள்ளைத் தோளில் தமிழ்ப் பண்பாடு மின்னிச்சென்றது.

மகளோடு வரவேற்பு பெண், என்னருகே  சமையல் பணியாள்.


சமையல்காரன் என்ன வேண்டும் என்று  மென்மையாகக் கேட்டான். அவர்கள் உணவுக் காலாச்சாரம் நமக்கு முற்றிலும் புதியது. நாங்கள் மெனுவைப்பார்த்து விழிப்பதைப் பார்த்தவன் அவரே சொன்னார். உங்களுக்கு ஸ்பேகட்டி கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சுட்ட பன்றி இறைச்சி வேண்டுமா என்றார். நானும் மருமகனும் கொண்டுவரச் சொன்னோம். என் மகளும் மனைவியும் உதட்டைப்பிதுக்கி வேண்டாம் என்றனர்.

ஸ்பேகட்டி சுவையாகத்தான் இருந்தது. ஆனால் சுட்ட பன்றி இறைச்சி அமிர்தம் போல மிகுந்த சுவையுடன் இருந்தது. சுவையென்றால் அத்தனை சுவை. சுடச் சுட வெட்டி வெட்டி உண்ணும்ப்போது நாவில் உமிழ் சுரந்துகொண்டே இருந்தது. நான் நீங்கள் கொஞ்சம் சாப்பிட்டுத்தான் பாருங்களேன் என்றே இருவரிடமும். முதலில் வேண்டாம் என்றார்கள். நாங்கள் உண்ணும் தீவிரத்தைப் பார்த்தவர்கள் கொஞ்சம் கிள்ளிச் சாப்பிட்டார்கள். பிறகு எங்களுக்கு வைக்கவில்லை. அந்த கிரில் வகை இறைச்சி நான் எந்த உணவு வகையிலும் சுவைத்ததில்லை. சமையல் காரனிடம் அதன் ரகசியத்தைக் கேட்டோம். பன்றிக்கு போடும் தீவனம் பற்றியும் அது வளரும் தூய்மையான இடம் பற்றியும் சொன்னான். அது வளர்ந்து கசாப்புக்குப் போகும் காலவறையரையையும் சொன்னான். அதனை சமைக்கும் நுடபத்தையும் சொன்னான்.கசாப்புக்குப் போகும் வரை சுவிஸ் பன்றிகள் சௌகர்யமாகத்தான் வளர்ந்திருக்கின்றன. உண்டு சுவைத்து உய்த்துணர்ந்து இறைச்சியைப் பாராட்டும்போதே பன்றி கண்டிப்பாய் மோட்சம் அடைந்திருக்கும். கொடுத்துவைத்த பன்றிகள். தமிழ்நாட்டுப் பன்றிகளைக் கண்டால் இவை சாதியிலியே சேர்க்காது. ஒண்ட விடாமல் விரட்டி விடும்.
நாங்கள் பயணத்தில் அடைந்து களைப்பு பன்றி உண்டும், அவர்களின் அணுசரனையான முகமன் அனுபவித்தும் தீர்த்துக்கொண்டோம்.உன்னத இரவு அது!


சுவிஸ் மலைத் தொடர்கள் நிறைந்ததால் 10 கிலோமீட்டருக்கு ஒருமுறை சுரங்கப்பாதையைக் கடக்கவேண்டியிருந்தது. சுரங்கங்கள் மிக மிக நீண்டவை. மலேசிய நெடுஞ்சாலையில் தைபிங்குக்கும் ஈப்போவுக்கும் இடையில் உள்ள ஒரே சுரங்கத்தைக் கடப்பதற்கு  இரண்டு நிமிடத்துக்கும் குறைவான நேரமே போதும். அங்கே நாங்கள் கடந்த சுரங்கள் சில  25 நிமிடங்கள் பிடித்தது. பூமிப்பந்தின் மேல்தளத்தைவிட்டு அடியாழத்தில் பலமணி நேரம் இருந்த அச்சம் நேர்கிறது. இப்படி எண்ணற்ற சுரங்கங்கள். வாகனங்கள் அதி விரைவாகத்தான் செலுத்தப்படுகின்றன, சுரங்கத்திலும்.

நாம் போகும் பாதையில் இரண்டு இடங்களைப் பார்க்கப் போகிறோம். இதனை என்ன விலை என்றாலும் தவிர்க்கவே கூடாது என்றார். ஒன்று கேபல் காரில் ஏறி மலை உச்சிக்குச் சென்று அதிகுளிரை அனுபவிப்பது. இன்னொன்று நயாகராவுக்கு நிகரான ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்ப்பது. மலைகள் நிறைந்த ஊரில் இதெல்லாமிருக்கும் தான் என்றே எண்ணிய என் மனம் இந்த இரண்டு இடங்களையும் மறக்க முடியாது காட்சிகளை பதிவு செய்துகொண்டது.

கேபில் கார் மலையின் அடிவாரத்தை அடைந்தபோது மக்கள் கூட்டம் நெருக்கியது. காரை நிறுத்த இடமில்லை. மருமகன் இரண்டு கிலோ மீட்டர் தாண்டி வீடமைப்பு பகுதியில் நிறுத்திவிட்டு வந்தார். திரும்பும்போது குழப்பமில்லாமல் கண்டுபிடித்தும் விட்டார்.

கீழே வட இந்தியர் நகரும் வாகனத்தில் இந்திய உணவை விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரு இட்டலியின் விலை படுபயங்கராமாக இருந்தது. பணம் கொடுத்த வலியில் தொண்டையில் இட்டலி  இறங்காது. 



கேபில் காரின் விலை ஒரு நபருக்கு முன்னூறு ரிங்கிட் கொடுக்கவேண்டி இருந்தது. அது உச்சி வரைக்குமான கட்டணம். ஏறி உட்கார்ந்து கொண்டோம். நிலத்திலிருந்து நிலத்தை தரிசிக்கும் அழகைவிட, வானத்திலிருந்து நிலத்தின் வனப்பு கூடிக்கொண்டே போனது. கூடியது அதுமட்டுமல்ல குளிரும்தான்.
மலை உச்சியில் , பனிக்காலத்தில் ஐரோப்பாவில் இருப்பது போன்ற பிரம்மையை உண்டாக்கியது. நாங்கள் அங்கு சென்றது கோடைகாலத்தில் என்றாலும் மலை முகடுகள் பனி கொட்டித்தான் கிடக்கின்றன. மேலே போனதும்தான் சாருக்கானையும் கஜோலையும் கண்டோம்.







தொடரும்....





Comments

வணக்கம்
ஐயா

அழகிய இடங்கள் நாங்களும் பாரத்ததுபோல ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின