Skip to main content

Posts

Showing posts from April 8, 2012
                              அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்                                 உள்ளொளி நிறைந்த உலகம்               நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்றிய் வண்ணம் இருக்கிறது போலும். ஆகவே தான், வாடகை இருப்பவனின் கனவு சொந்த வீடொன்றில் நிறுவுவதிலேயே கசிந்து நிலைகொள்கிறது.     நான் வீடொன்றை கட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, “வீடு கட்ட நிலம் இருக்கு வேணுமா?” என்ற நண்பர் ஒருவர் கேட்டார். நிலத்தை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பணம் போதாது என்றே உள்மனம் கருதினாலும் ,” என்ன விலைக்கு வருகிறது” என்ற ஆசையை வெள