Skip to main content

Posts

Showing posts from May 22, 2011

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

2. விரட்டுகின்ற மிருகங்கள்          கோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் . தவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். என் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன். மணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம்  வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய்மையாக இருப்பதற்கு கொஞ்சம் பொறுப்பெடுத்

ஹோலிடேன்னா இப்படித்தாம்பா

          கடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில்  கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.            காலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள் காரை ஓட்டுவதிப் பார்த்தால் கும்பகர்ணனுக்கே தூக்கம் வராது. இரண்டு காரிலும் ஐந்து பேரப்பிள்ளைகள் இரு