Skip to main content

Posts

Showing posts from March 13, 2011

பதின்மத்தில்

                                            Dr.puspha -president of EWRF SUNGAI PETANI    கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது.. காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்காலை வேலை உற்சாகமான பொழுதை எனக்கு அளிக்கப்போகிறது என்பதை யூகித்திருக்கவில்லை நான். அவரோடு ஐந்தாறு கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள்  மாணவர்களைப் பதிவதிலும் காலையில் நடைபெறவிருக்கும் மாணவர்க்கான தன்முனைப்புப் பயிற்சிப் பணிகளுக்க

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா மலை உச்சி குப்ரி மஹாசு மலை உச்சி இது . மேலே பஞ்சாப் போகும் பாதை நெடிகிலும் உள்ள் விக்ஸ் மரங்கள். ஆக மேலே குப்ரியின் சிவன் கோயில்.குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்.  சிம்லா மலை உச்சி குப்ரியில், பின்னால் தெரிவது இமய மலைத்தொடர் 4.      ஓரிடத்தில் இறங்கி கொறிப்பதற்கு கடலைப் வாஙகப்போனேன். கடலையோடு பொறி, தக்காலித்துண்டு, பெப்பர் மிளகாய்த்துண்டு, பருப்பு கலந்து மிளகுத்தூளையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுப்பார்த்தேன். அப்படியொன்றும் அலாதி சுவையில்லை. சுங்கைபட்டாணி துளசி ராமன் மிக்சருக்கு ஈடாகாது. குளிருக்குப் பொருத்தமான உணவாகிறது அங்குள்ள மக்களுக்கு. நிறைய பேர் நின்றுகொண்டு அங்கேயே சுவைத்துக்கொண்டிருந்தனர்.        உறை பனி காலம் தொடங்கப் போவதை ஒரிரு தடயங்களைக் காண முடிந்தது. ஓரிடத்தில் கொட்டியிருந்த  ஒரு பிடி ஐஸ் துகல்களைக் மருமகன் கொண்டு வந்தார். இன்னும் ஓரிரு தினங்களில் உறை பனியைக் காணமுடியும் போலும். உறை பனியைக்கான நாம் மன்னாடி போகலாமென்றார் தோமஸ்.        “ உறை பனியைத் தவிர வேறென்ன அங்க இருக்கு? என்று கேட்டால் மனைவி.        “ அதுதான் அழகு, பனிச்சருக்க

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா விடுதியில், சிமலா மலை உச்சியில் 3.    எங்களுக்கு மணி 11க்குதான் விடிந்தது.      லோபியில் கிடந்த ஆங்கிலப் பத்திரிகையில் சிம்லாவில் குளிர் ஐந்து செல்சியஸ் என்று போட்டிருந்தது. இத்தவனையில் இது குறைந்தபட்ச குளிர் என்று எழ்தியிருந்தது. இன்னும் சில தினங்களில் குளிர் மைனஸ் செல்சியஸைத்தொடும் என்றும் கணித்திருந்தது. தடித்த குளிராடை அணிந்தால் மட்டுமே குளிரைச் சாமளிக்க முடியும். எங்களை சிம்லா குளிர் ஒன்றும் செய்து விட முடியாது. நாங்கள் இன்று சாயங்காலம் சிம்லாவை விட்டு இறங்கி விடுவோமே!      அன்று காலை பசியாறிக்கொண்டிருக்கும்போது இருவர் உள்ளே நுழைந்தனர். பார்ப்பதற்குத் தமிழர் போலவே இருந்தனர். வடநாட்டுக்காரர்களாக இருக்குமோ என்று பேசத் தயங்கினேன். பின்னர் அவர்கள் உரையாடியதைக் கேட்டதும்தான் தெரிந்தது அது மலேசியத் தமிழ் என்று. மலேசியத் தமிழ் என்று எப்படிக்கண்டுபிடிப்பது? பேச்சின் ஊடே மலாய் வார்த்தை புகுந்துவிடும். உச்சரிப்பு அழுத்தமாய் இருக்காது. தமிழ் நாட்டில் காணப்படும் வட்டார வழக்கு இருக்காது. ஒரே மாதிரித் தமிழ் பேசுகிறோம். thr ராகாவினர் பேசும் தமிழ்போல.       “மலேசியாவா?” என்றுத