Skip to main content

சேலை கட்டிய மாதர்






கணினிக் காதலர் மலாக்கா முத்துக்கிருஷ்னன் தன்னுடைய வலைப்பூவில் http://ksmuthukrishnan.blogspot.com/ சில பழமொழிகளுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் அளித்திருகிறார். மூடநம்பிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்த விளக்கங்கங்கள் ‘ஆமாம் சரிதான்’ என்று ஆமோதிக்கச்செய்யும். அவருடைய விளக்கங்கள் பழமொழிகளை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கிறது. எப்போதுமே நமக்கு இருக்கும் சொற்ப அறிவைக்கொண்டு நம்மிடம் உலவும் தவறான கருத்தாக்கங்களுக்கு அறிவுப்பூர்வ முறையில் ஆழமாகச் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும். நாம் மூட நம்பிக்கைகளை நம் பாக்கெட்டுக்குள் பத்திரமாக பாதுகாப்புடன் வைத்தவாறே இருந்தால் நமக்குள் வெளிச்சம் வர அஞ்சும். நம்மைப் பிரித்து ஆள்பவர்களுக்கு எளிமையாகிவிடும். இப்போதுள்ள பாரிசான் அரசு செய்வதைப்போல!

சேலை கட்டிய பெண்ணை நம்பவேண்டாம் என்ற பழமொழிக்கு ‘கள ஆய்வு’ செய்து விளக்கம் அளித்திருக்கிறார் நண்பர் முத்துக்கிருஷ்ணன். எப்போதோ ஒருமுறை ஒரு பெண் சேலை கட்டிக்கோண்டு பூ வைத்து போட்டிட்டு பவ்யமாக காட்சி அளித்து சோரம் போயிருக்கவேண்டும். அவளை நம்பி எமாந்தவன் இந்தப் பழமொழியை அவன் வாழ்வனுபவத்தைச் சார்ந்து புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, நொந்து நூலாகி பழமொழிக்கான விளக்கத்தைப் பரவ விட்டிருக்கிறான் என்று கூட பெருளாக்கிக்கொள்ளலாம்.

சரி அதை விடுங்கள்!

சேலை கட்டிய பெண்ணை நம்ப வேண்டாம் என்ற பழமொழியைப் பற்றி பேசும்போது லங்காவியில் நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது நடந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது அப்பழமொழியைச் சார்ந்த சம்பவமல்ல. வேறொரு கதை.

லங்காவி ஒரு சுற்றுலாத்தலம்.

மலேசியாவிலேயே அதிகம் வெளிநாட்டுக்காரர்கள் சுற்றுலாவுக்கு வரக்கூடிய இடம் அந்தத் தீவு. ஐரோப்பியர்களை அங்கே உலவுவதைப்பார்க்கலாம். லங்காவியில் வரிச்சலுகையில் விற்கும் மதுபானங்களும் , உல்லாசத் தளங்களும், சூதாடும் விடுதிகளும், கடற்கரையும் வெள்ளையர்கள் அங்கு வருவதற்கான புற ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது. கடற்கரைகளில் இவர்கள் உள்ளாடையோடு நடமாடுவதைப்பார்த்து கம்பத்து மக்கள் வெல வெலத்துப் போயிருக்கிறார்கள் தொடக்கத்தில்.-நன்றாகப் பார்த்து விட்டு!

நம் பெண்கள் சேலை கட்டுவதை மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்த்த ஒரு ஐரோப்பியப் பெண் தனக்கும் சேலை கட்ட ஆசையாக இருக்கிறது என்று ஒரு தமிழ்ப்பெண்ணிடம் கூறியிருக்கிறாள். சேலை கட்டிக்கொண்டு உங்கள் கலாச்சார நிகழ்வில் கல்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாள். ஐரோப்பியர்கள் தேடலை (adventure) விரும்புபவர்கள். கொசுவமும் முந்தானையும் அவளுக்கு ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும்.

சேலை கட்டிக்கொண்டு திருமண நிகழ்வுக்குப் போகலாம் என்று அவளிடம் சொல்லி அதற்கான ஏற்பாட்டைச் செய்ய முனைந்தாள் அப்பெண். முதலில் ஒரு சேலையை வாங்கினாள். சேலைக்குப் பொருத்தமான ரவிக்கையைத் தைத்துக்கொண்டாள். அப்போது “சேலைக்கு அளவெடுக்கவில்லையே” என்று கேட்டிருக்கிறாள் அந்த வெள்ளைப்பெண்.

இல்லை. இப்படியேதான் கட்ட வேண்டும் என்று கூறியபோது அவளுக்கு வியப்பு மேலோங்கியிருக்கிறது.

“you mean just a long piece like this enough?” (இந்து ஒரு நீண்ட துணியே போது மென்கிறாயா?)

“Yes” என்றவுடன் அவளுடைய ஆர்வம் மேலும் இரட்டிப்பாகியிருக்கிறது.

“ வெட்டி எடுக்கும் வேலையெல்லாம் இல்லையா? என்றும் கேட்டிருக்கிறாள்.

“அந்த வெட்டி வேலையெல்லாம் இதற்கு இல்லை,” என்றிருக்கிறாள் தமிழ்ப்பெண்.

நம் பெண்கள்தான் ஒரு சேலைத்துணியிலேயே பல விதமான முறைகளில் கட்டுவார்களே. இதென்ன பெரிய அதிசயம்?

ஒரு திருமண நாளைத்தேர்வு செய்து அப்பெண்ணுக்கு சேலை கட்டி பொட்டிட்டு, பூச்சூடி திருமணத்துக்கு அழைத்து வந்தாள். அங்கே நடக்கும் சடங்குகளைப் பார்ப்பதை விடுத்து எல்லோரும் இவளையே நோட்டமிட்டிருக்கின்றனர். மணமக்கள் கூட கூட்டத்தை ஈர்க்கவில்லை அவள்தான் அன்றைக்கான நாயகியாக வலம் வந்திருக்கிறாள். அவள் ஐரோப்பியர் என்பதற்காக அல்ல! அங்கே வேற்று நாட்டவரை பார்ப்பதெல்லாம் இயல்பாகிப் போன காட்சிகள்.

வேறொரு விஷயத்திற்கு அவள் ஈர்ப்பின் மையப்பொருளாக இருந்திருக்கிறாள்.

அப்போது அவள் இடது கையில் சிகிரெட்டு புகைந்திருக்கிறது. வலது கையில் ஒரு பியர் டின்னும் புகைந்து கொண்டிருந்ததுதான் காரணம்!

இப்போது சொல்லுங்கள் சேலை கட்டும் பெண்ணை நம்பலாமா?

Comments

அன்பரே, வணக்கம்.
இப்போதைக்கு, சேலை கட்டும் மாதர்களை நாம் நம்பித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. ஆனால், கையில் பீர் பாட்டிலுடன் சேலையை அகற்றும் ஒரு பெண்ணை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது என்னுடைய கருத்து.

இருப்பினும், ஒரே ஒரு பழமொழியை எடுத்துக் கொண்டு அதற்கு அருமையான நிகழ்வுகளைத் தொகுத்து மிகச் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். உங்கள் நடையில் சரஸ்வதி தேவி கொஞ்சி விளையாடுகிறாள் ஐயா! அவளுக்கு முதல் நன்றிகள்.
Anonymous said…
நன்றிங்க முத்துக்கிருஷ்ணன்,
உங்களின் நிறைவான பாராட்டு நெகிழ வைக்கிறது. வாழ்க்கையில் எல்லாமும் வெறுத்து சலித்துவிட்டது. வாசிப்பும் எழுத்தும் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
நல்ல வேளையாக வாசிப்பும் எழுத்தும் சலித்துப்போன வாழ்வை மீட்டுத்தருகிறது. (இழந்த சக்தியை மீட்டுத்தரும் அந்தக் காலத்து கின்னஸ் ஸ்டௌட் விளம்பரம் போல)மீண்டும் நன்றி. உங்களைப் பின் தொடர்வேன்.வாழ்க.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின