Friday, November 13, 2009

vanakkam ! hindraf makkal sakti thodarbaana kaddurai nanru,iruppinum minnal velichathil mulaikkum kaalan pohll makkal sakti kadchiyin muthal mugavariyai adayaalam kandu atha muthal yemaadru kalappaiyai udaitheriya vehddiyathu kaddurai asiriyarin kadamai. nanri

Se.Gu

Wednesday, November 11, 2009

பொழுதும் தொலைந்துபோகும் உரையாடல்கள்

மகளும் மருமகளும்

வீடு திரும்ப

எட்டுக்குமேல் ஆகிவிடும்

தொலைக்காட்சி

சேன்னல் சண்டை

மடிக்கணினி

கைத்தொலைபேசியில்

கனிவுக்கரிசனம் ஒழுகும்

உரையாடலுக்குப்பின்

மொனமாகிவிடும் மீண்டும்பகலெல்லாம்

பூட்டிக்கிடந்த அண்டை வீடுகளும்

இரவில்தான் வெளிச்சம் உயிர்க்கும்வாய்ச்சண்டைபோடவாவது

அவள் உயிரோடிருந்திருக்கலாம்நான்கு வயது முடிவதற்குள்

பேரனையும் பாலர்பள்ளிக்கு

கடத்திவிட்டார்கள்

வீடு திரும்பவும் வெள்ளையுடுத்தி

தைக்குவாண்டோவுக்கும்

ஜிப்பா உடுத்தி சங்கீத வகுப்புக்கும்

போய்வருவதில்

அந்தி முடிந்துவிடும்

களைப்பில் உறங்கும்

பேரனை எழுப்பி

எப்படிப்பேசுவது பழையபடி?கோ.புண்ணியவான்.

Ko.punniavan@gmail.com
பிரிந்துவிட்டோமே

எனும் வலிக்கும் தருணங்களில்

நமக்கான

காதல்

மீண்டும் பூக்கிறதுஉன்னை வழியனுப்பும்

தருணங்களில்

நீ திரும்பக்கிடைக்க

மட்டாயா

என்ற எதிர்பார்ப்பில்

நீ திரும்பிப்பார்க்க

மீண்டுமொருமுறை

பூக்கிறது.கோ.புண்ணியவான்.

Monday, November 9, 2009

அதே பெண்ணை இன்று மீண்டும் பார்த்தேன்

2007 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அந்திசாயும் வேளையில் சுங்கைப்பட்டாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் வாயிலில் பெரிய பேன்னர் ஒன்றைக்கட்டுவதற்கான வேலையில் நானும் நண்பர் செபஸ்டியனும் வேறு சில நண்பர்களும் ஈபட்டிருந்தபோது மேற்கு திசையிலிருந்து நடந்துவந்த ஒரு பெண் எங்களைப்பார்த்ததும், நின்று விட்டாள்.

நாங்கள் கொஞ்சமும் எதிர்ப்பாராதவாறு, “என்னைக்கொண்டுபோய் பஸ் ஸ்டேசனில் யாராவது விடமுடியுமா?” என அதிகாரக்குரலில் பேசத்துவங்கினாள். எல்லாரும் வேலையை விட்டு விட்டுத் திரும்பிப்பார்த்தனர்.கையில் ஒரு பாலித்தின் பையிருந்தது. ஐந்தடிக்கும் குறைவான குள்ளம். கண்டிப்பாய் முப்பத்து மூன்று வயதைக்கடந்திருக்கும் உடல். நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். சற்று செழிப்பான ஸ்தனங்களும் பிட்டங்களும் அவளுக்கு.

அவளின் அதிகாரத்தோரணையைப் பொருட்படுத்தாமல் அவளுக்கு உதவி செய்யும் மனோபாவத்தோடு “இந்த நேரத்தில் என்ன தனியா வரீங்க? தொனைக்கு யாரும் கூட வர்லியா?” கரிசனத்தோடு கேட்டு வைத்தேன்.

“இல்லைங்க அதான் ஒங்கள கேக்குறேன்,” என்றாள்.

முதல் பார்வையுடன், அவளின் உரையாடலைப்பொருட்படுத்தாமல் மற்ற அனைவரும் பேன்னர் கட்டுவதிலேயே கவனமாக இருப்பதுபோலப்பட்டது. இந்தப்பெண்ணின் இருப்பும் செயலும் அவர்களை ஈர்க்காதது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் அவளோடு உரையாடுவதைப்பார்த்தும் அவளிடம் து¨ணைக்கேள்விகளைத் தொடுக்காதும் கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்குக்கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. நான் மட்டுமே அவளிடம் ஈர்க்கபட்டுவிட்டவனைப்போல குற்றமனம் எனக்குள் தலைகாட்டத்தொடங்கியது.

“தனியா ஒரு பெண் இந்த நேரத்தில் தொணை இல்லாமல் வரலாமா?” என்ற வினாவோடு என் காருக்குப்போக ஆயத்தமாகும் வண்ணம் கால்சடடைப்பையிலிருந்து சாவியை வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது, என் தொலைபேசி ஒலித்தது. அதன் திரையில் செபஸ்டியன் பேர் முகத்தைக்காட்டியது. அருகில் இருக்கும் செபஸ்டியன் தொலைபேசி வழி ஏன் தொடர்புகொள்ளவேண்டும் என அவர் இருந்த திசைக்குத்திரும்பினேன். சற்று நேரத்துக்கு முன்னமேயே மனிதர் ஒரு ஆறடி தள்ளிப்போய் வேறுபக்கம் திரும்பி நின்று தொலைபேசியைக் காதில் வைத்துக்கொண்டு வேறு யாரிடமோ பேசுவதுபோன்ற பாவனையை அரங்கேற்றிய வண்ணமிருந்தார். அவரின் முன்னேற்பாடான பாவனையில் ஏதொ வில்லங்கம் இருப்பதை உணர்த்தியது.

“சார், try to avoid her please, I will explain afterwords” உடனே தொடர்பைத்துண்டித்துவிட்டவர் என் பக்கம் திரும்பவில்லை. ஒற்றை வரியில் வந்த எச்சரிப்பில் நான் உஷாராகத்துவங்கினேன். செபஸ்தியன் பிரதி தினமும் சுங்கைபட்டாணியோடு ஒட்டி உறவாடும் மனிதர். அவருக்குத்தெரியாதவர் எண்ணிக்கை சுங்கைப்பட்டாணியில் மிகக்குறைவாகத்தான் இருப்பார்கள். அன்றாடம் எல்லாத் திசைகளையும் அவருடைய கார் பயணித்த வண்ணம் இருக்கும். MCIS முகவராக நுகர்வோரிடம் நல்லுறவை வளர்த்துக்கொண்டவர். அவரைப் பிடிக்கவேண்டுமென்றால் இரவில்தான் சாத்தியமாகும். அப்படிப்பட்ட வேலை பளு கனத்த மனிதரைப் பிடித்துவைத்துக்கொண்டு தமிழர் திருநாளுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோதுதான் இந்தப்பெண்ணுடனான உரையாடலில் சிக்கிக்கொண்டிருந்தேன்.

கையில் எடுத்த சாவியை மீண்டும் பைக்குள் போட்டுவிட்டு அவளுடனான உரையாடலைத் நிறுத்திக்கொள்ளும்பொருட்டு ,“எனக்கு நெறைய வேலை இருக்கு,” என்று பின்வாங்க எத்தனித்தேன்.

“யாங்க இத்தனை ஆம்புல இருக்கீங்க ஒங்கள்ள யாராவது ஒருத்தர் என்ன பஸ் ஸ்ட்டேசன்ல உடலாமில்ல,” என்றாள். இந்த முறை அவளின் குரல் உரத்து ஒலித்தது.

இந்த முறையும் யாரும் பேசவில்லை. பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த நானும் அமைதியானதில் அவளின் எரிச்சல் கூடியிருக்ககூடும்.

“ஒரு பொண்ணு கேக்குற ஒதவிய செய்ய யாருக்குமே மனசு வர்லியா?” என்றாள் உக்கிரமாக. செப்ஸ்டியன் எச்சரித்ததற்கான பொருள் மெல்லப்புரியத்துவங்கியது.

எனக்கு வார்த்தைகள் நாக்கு நுணி வரை வந்து எச்சிலில் நனைந்து நீர்த்துப்போனது.

“ நீங்கள்லாம் என்னா ஆம்பிலைங்க,” என்றாள் மீண்டும். புத்தி சுவாதீனமற்றவளாக இருப்பாளோ. இல்லை! கண்டிப்பாக இருக்காது. அவளிடமிருந்து ஆகக்கடைசியாக வெளிப்பட்ட வாக்கியம் அவள் சுய நினைவுள்ளவள்தான் என்பதற்கான நல்ல ஆதாரம்.

“ இந்த நேரத்துல ஒரு பொண்ணு கேக்குற உதவிய செய்ய வராத உங்கள எவன் மதிப்பான்” என்று சொல்லிக்கொண்டே நடக்கத்துவங்கினாள். வேறென்னென்னவோ சொல்லிக்கொண்டே எங்களைவீட்டு சற்றுத்தள்ளிப்போய்விட்டவளின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அநேகமாக கெட்ட வார்த்தைகளாகக்கூட இருக்கலாம்.

கண்ணிலிருந்து அவள் மறைந்தவுடன் தான் மீண்டும் பிரசன்னமானார் செபஸ்தியன்.

“சார் நல்ல காலம் நீங்க அவளுக்கு லிப்ட் கொடுக்கல. கொடுத்திருந்திங்க, ஒங்க பேரு கெட்டுப்போயிருக்கும்,” என்றார். பக்கத்திலிருந்த நண்பர்கள், “அவ ஒரு மாதிரியானவ சார். இவ்ளோ நாளா எஸ்.பியில இருக்கீங்க அவளப்பத்தி தெரியாதா?” இன்னொருத்தர் “அவ பெரிய பஜாரி,” என்றனர் பணியில் ஈடுபட்டவாறு.

இன்று காலை தபால் நிலையத்தில் மீண்டும் அவளைப்பார்த்தேன். அறிமுகமில்லாத ஒருவரிடம் தனக்குக்கடைத்த வரிசை எண்ணைப்பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தவள் என்னிடம் திரும்பி, “யாங்க என் டெலிபோனுக்கு அடிக்கடி என்னத்திட்டி கோல் வருது. இதுக்கு என்ன செய்யலாம்?” என்றாள். சாத் சாத் அவளேதான். “போலிஸில் புகார் கொடுங்க.” என்றேன். மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு அந்தி வேளையில் ஒரே ஒரு முறைதான் சந்திக்க நேர்ந்தவளை மீண்டும் மூளை நினைவு கூர்ந்தது வியப்பாகவே இருக்கிறது. மூளை நினைவில் வைத்திருந்து அடையாளம் காட்டுவது தோற்றத்தை மட்டுமல்ல, அவர்கள் விட்டுச்சென்ற சம்பவத்தின் ஊடே நடந்தேறிய உரையாடலைப்போலும்!

“இந்த நம்பரு யாருதுன்னு எப்படி கண்டிபிடிக்கிறது?” என்று உரையாடலைத்துவங்கினாள்.

அதற்குள் ஒரு புதிய எண்ணின் அழைப்பு ஒலிபரப்பானது. அது என் முறைபோன்ற பாவனையோடு கவுண்டரை நோக்கி நடக்கத்துவங்கினேன்.